100 பிணங்களுடன் உடலுறவு கொண்ட பிணவறை காவலாளி. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்…!

.
மெரிக்காவில் பிணவறையில் காவலாளியாக பணிபுரியும் ஒருவர் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பிணங்களுடன் உடலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த திடுக்கிடும் தகவல் குறித்த விபரங்கள் வருமாறு: அமெரிக்காவில் Ohio மாகாணத்தை சேர்ந்த Kenneth Douglas என்ற 60 வயது நபர் அங்குள்ள பிணவறையில் இரவுநேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கும் பிணங்களுடன் அவர் தினசரி உடலுறவு கொண்டதாக அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதுவரை சுமார் 100 பெண் பிணங்களுடன் உடலுறவு கொண்டதாகவும், ஒப்புக்கொண்டுள்ள அவர் உயிருள்ள பெண்ணுடன் உடலுறவு கொள்வதை விட இதில்தான் தனக்கு மிகவும் விருப்பம் அதிகம் என்று கூறியுள்ளார்.


பிணங்களில் உள்ள விந்தணுக்களை வைத்து இவர்தான் தான் அந்த பிணங்களுடன் உடலுறவு கொண்டார் என்பதை போலீஸார் நீதிமன்றத்தில் நிரூபணம் செய்துள்ளார். தற்போது Kenneth Douglas கைது செய்யப்பட்டு Ohio நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இவருக்கு சுமார் 10 வருட சிறைத்தண்டனை கிடைக்கும் என நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து இவருடைய மனைவி கூறியதாவது, அவரிடம் எப்போதுமே பிணவாடை அடிக்கும் என்றும், அவர் பிணவறையில் பணிபுரிவதால் அதை நான் பெரிதுபடுத்தவில்லை என்றும், தற்போதுதான் உண்மை தெரிகிறது என்றும் கூறியுள்ளார். 

Popular Posts