பிரித்தானியாவில் சிறுவன் ஒருவனின் முதுகில் மருதாணியால் படம் ஒன்று வரைந்ததால் அவனுக்கு பக்கவிளைவு ஏற்பட்டதுடன், உயிரிழக்கும் அபாயம் நேரிட்டுள்ளது.
பிரித்தானியாவின் லீட்ஸ் நகரை சேர்ந்த லியாம் (7) தனது பெற்றோர்களுடன் எகிப்து நாட்டிற்கு சுற்றுலாச் சென்றுள்ளார்.
சுற்றுலாவின் போது இவன் சுட்டித்தனம் செய்யாமல் ஒழுக்கமாக நடந்து கொண்டதால் குடும்பத்தினர், இவருக்கு மருதாணியால் பச்சைக்குத்தி கொள்ள அனுமதி அளித்துள்ளனர்.
எனவே இவர் தனது முதுகில்,டார்த் மாவுல் (Darth Maul) என்ற பிரபல சித்திர திரைப்படத்தின் கதாபாத்திரத்தை பச்சை குத்திக் கொண்டுள்ளார். இதன்பின் நாடு திரும்பிய இச்சிறுவனுக்கு சில நாட்கள் கழித்து முதுகில் கொப்பளங்கள் வந்துள்ளதால் வலியால் துடித்துள்ளார். தற்போது மருதாணி அழிந்திருந்தாலும், சிறுவனுக்கு ஏற்பட்ட பக்கவிளைவு தழும்பினை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் மருத்துவர்கள் இவருக்கு சிகிச்சை செய்து வெயிலில் செல்லக் கூடாது என்றும் இரண்டு வருடங்களுக்கு வெளியே செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து லியாம் கூறுகையில், நான் ஒழுக்கமாக இருந்ததற்கு இந்த பச்சை கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளித்தது, ஆனால் இப்போது எனது உடலில் அதிக வலியுள்ளது என கதறியுள்ளார்.