எலிகளை கொன்றால் பரிசு: முந்துங்கள்!

.
பிலிப்பைன்ஸ் நாட்டில் எலிகளை கொல்வோருக்கு பரிசு வழங்கப்படுகிறது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின், ஒலாங்கபோ நகரில், எலிகளின் சிறுநீரில் இருந்து பரவும் பாக்டீரியாக்களால் பரவும் மஞ்சள் காமாலை, எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) போன்ற நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடுமையான காய்ச்சல், குளிர், வாந்தி பேதி போன்ற அறிகுறிகளுடன் ஏற்படும் இந்த நோய்களை ஆரம்பத்திலேயே கவனிக்கா விட்டால், சிறுநீரகம் மற்றும் இதய பாதிப்புகளை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

எலிகளின் சிறுநீரால் பரவும் நோயை கட்டுப்படுத்துவதற்காக, பெரிய எலிகளை கொன்று நகர நிர்வாகத்திடம் அளித்தால் ஒரு எலிக்கு 14 ரூபாயும், சிறிய எலிகளுக்கு ஐந்து ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. எலிகளால் பரவும் நோய்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் ஒரு மாதம் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Popular Posts