வீட்டில் அட்டகாசம் செய்த பாம்பு: பேய் என பயந்தோடிய குடும்பத்தினர்

.
கனடாவில் வீடு ஒன்றில் நுழைந்த பாம்பு ஒரு வாரமாக அட்டகாசம் செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கனடாவின் ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் உள்ள வீடு ஒன்றில் புகுந்து சத்தம் போட்டு கொண்டும், பாத்திரங்களை கிழே தள்ளிவிட்டும் பாம்பு ஒன்று இருந்துள்ளது.
இதனை அறியாத ரெய்ச்சல் லெக் (Rachel Leck) என்ற பெண்மணியும், அவரது மகன் சேவியரும் (Xavier age-10) தங்கள் வீட்டில் பேய் நடமாடுவதாக நினைத்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு நாள் இருவரும் படுக்கையில் அமர்ந்திருந்த போது, திடீரென அங்கு பாம்பு வந்ததால் ரெய்ச்சல் தன் மகனை தூக்கி கொண்டு கூச்சலிட்டு ஓடியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்டை வீட்டிலுள்ள நபர்கள் மற்றும் வனத்துறையினர் பாம்பினை தேடியுள்ளனர்.
இதன்பின் ரெய்ச்சல் வீட்டின் அறை ஒன்றிலிருந்து ,10 அடி நீளமுள்ள பைத்தான் (Python) பாம்பினை பிடித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த வகை பாம்புகள் சுமார் 23 அடி நீளம் வரை வளரக்கூடும் என்றும் ஆனால் இவை மனிதர்களை தீண்டுவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்

Popular Posts