திடீரென கண்முன்னே மறையும் தேவாலயம்!

.
பெல்ஜியத்தில் உள்ள தேவாலயம் ஒன்று திடீரென கண்முன்னே மறைந்து விடுவது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
பெல்ஜியத்தில் உள்ள லிம்பெர்க் (Limberg) என்னும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த தேவாலயம், பார்ப்பதற்கு பழைய தேவாலயம் போன்றே காட்சியளிக்கிறது.
இந்த தேவாலயம் 2000 உருக்கு தகடுகளால் 100 அடுக்குகளில் கட்டப்பட்டுள்ளது.
சில கோணங்களில் பழைய தேவாலயம் போன்றே காட்சி அளிக்கும் இந்த கட்டிடம், சற்று வேறு கோணத்தில் அதனருகே செல்ல செல்ல நம் கண்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்குவதோடு சிலமணித்துளிகளில் முற்றிலுமாக மறைந்துவிடுகிறது.
இந்த தேவலாயத்தை வடிமைத்த வல்லுனர்கள் இதுபற்றி கூறுகையில், பெல்ஜியத்தில் பெருகி வரும் கைவிடப்பட்ட தேவாலயங்களே எங்களை ஊக்குவித்தது.
இந்த தேவாலயத்தை குறிப்பிட்ட சில கோணங்களில் பார்த்தால் பாரம்பரியமிக்க தேவாலயம் போன்றே காட்சியளிக்கும்.
மேலும், இந்த தேவாலயத்திற்கு "கோடுகளுக்கு இடையே படித்தல்" (Reading between the lines) என்று பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.





Popular Posts